உலகமே கொரோனாவில் முடங்கிக் கொண்டிருக்கிறது. திரையரங்குகள் தூங்குகின்றன. திரைப்படத் துறை திணறிக் கொண்டிருக்கிறது. இழப்பை சமாளிக்க முன்னணி நட்சத்திரங்கள் தங்கள் சம்பளத்தை பாதியாக குறைக்க முன்வந்துள்ளனர்.
ஆனால் ஒருவரின் காட்டில் மட்டும் பண மழை கொட்டுகிறது. அவர் இயக்குரும் தயாரிப்பாளருமான ராம் கோபால் வர்மா. சர்ச்சை இயக்குநர் என்று பெயர் பெற்ற அவர், அண்மையில் க்ளைமேக்ஸ், நேகட் நங்கா நாக்னம் ஆகிய 2 படங்களை ஓடிடி பிளாட்பார்மில் வெளியிட்டு வசூலை அள்ளினார்.
அவரது ஆர்ஜிவி வோர்ல்டு தியேட்டரில் இந்த திரைப்படங்கள் வெளியாகின. அடுத்து த்ரில்லர் என்ற புதிய திரைப்படத்தை அண்மையில் அறிவித்தார். படத்தின் நாயகி அப்சரா ராணியின் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டார். அடுத்து பர்ஸ் லூக் போஸ்டரை வெளியிட்டு இணையத்தை சூடாக்கினார். இன்று அவர் படத்தின் ட்ரைலரை வெளியிட்டு சமூக வலைதளங்களை தீப்பற்ற வைத்திருக்கிறார்.
ட்ரைலர் வெளியான சில மணி நேரத்தில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ட்ரைலரை பார்த்துள்ளனர். விரைவில் ஆர்ஜிவி வோர்ல்டு தியேட்டர் மூலம் ஓடிடி தளத்தில் படம் வெளியாக உள்ளது. விவகாரமான படம்..வியாபாரமாகிறது.