லடாக் எல்லையில் சீனாவின் அத்துமீறலால் போர் பதற்றம் எழுந்து, தற்போது தணிந்துள்ளது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று லடாக் எல்லைக்கு நேரில் சென்று படைகளின் தயார் நிலை குறித்து ஆய்வு செய்தார்.
அப்போது அமைச்சர் முன்னிலையில் போர் ஒத்திகை நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக விமானத்தில் இருந்து பாராசூட் வீரர்கள் கீழே குதித்தனர். மயிர்க்கூச்செரியும் இந்த வீடியோ சமூக வலைதங்களில் வைரலாக பரவி வருகிறது.