இமயமலையின் லடாக் எல்லையில் போர் பதற்றம் எழுந்திருப்பதால் டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு அண்மையில் தடை விதித்தது. மேலும் பினாமி பெயர்களில் செயல்பட்ட மேலும் 47 சீன செயலிகளுக்கு மத்திய அரசு சில நாட்களுக்கு முன்பு தடை விதித்தது.
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே தரவுகள் அனைத்தையும் இந்தியாவில் சேமிக்க தயார் என்று டிக் டாக் நிர்வாகம் தரப்பில் மத்திய அரசிடம் முறையிட்டுள்ளது.
தங்கள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று டிக் டாக் தரப்பில் மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.