டிக்டாக்கில் கெட்ட ஆட்டமாம்.. 5 பெண்களுக்கு 2 ஆண்டு சிறை; 14 லட்சம் ரூபாய் அபராதம்

வடக்கு ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, முஸ்லிம் நாடுகளில் வலிமையான ராணுவ பலம் கொண்ட நாடு எகிப்து. நைல் நதி நாகரிகம், பிரமிடு ஆகியவை பழங்கால எகிப்தியர்களின் அடையாளமாக இன்றும் போற்றப்படுகின்றன.

டிக்டாக் பிரபலம் மோவாடா அல்-ஆதம்
டிக்டாக் பிரபலம் மோவாடா அல்-ஆதம்


தற்போது எகிப்தின் அதிபராக அப்துல் பத்தா எல் சிசி பதவி வகிக்கிறார். ராணுவ தளபதியாக இருந்த இவர் கடந்த 2014 ஜூனில் ஆட்சியைக் கைப்பற்றினார். அவர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, சமூக ஒழுக்கத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. குறிப்பாக பெண்கள் விவகாரத்தில் நிலைமை மிகவும் மோசம்.

ஹனின் ஹோசம் டிக்டாக் வீடியோ


டிக்டாக்கில் ஆட்டம் போட்டதாக ஹனிம் ஹோசம், மோவாடா அல்-ஆதம் உட்பட 5 பெண்கள் மீது போலீஸார் அண்மையில் வழக்கு பதிவு செய்தனர். இதில் ஹனிம் ஹோசத்தை 13 லட்சம் ரசிகர்களும் மோவாடாவை 20 லட்சம் ரசிகர்களும் பின்தொடர்கின்றனர்.
அவர்கள் மட்டுமன்றி டிக்டாக்கில் கெட்ட ஆட்டம் ஆடியதாக மேலும் 3 பெண்களும் கைது செய்யப்பட்டனர். அந்த 3 பேரின் பெயர் விவரங்கள் வெளியிடப்படவில்லை.


இந்த டிக்டாக் வழக்கு எகிப்து நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, “5 பெண்களும் சமூக ஒழுக்கத்தை சீர்குலைக்கும் வகையில் டிக்டாக்கில் கெட்ட ஆட்டம் ஆடியுள்ளனர். எனவே 5 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. அதோடு 5 பேருக்கும் தலா 14 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது” என்று தீர்ப்பளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *