எப்போது பட்டாசு வெடிக்கலாம்? என்பது குறித்து தமிழக அரசு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் 14-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அமைச்சர் கே.சி.கருப்பணன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.”சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரம் அறிவிக்கப்படுகிறது.
தமிழகத்தில் தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம். அரசுக்கு ஒத்துழைப்பு அளித்து, பாதுகாப்பாக தீபாவளி கொண்டாட வாழ்த்துகள்.
தமிழக மக்கள் மாசில்லா தீபாவளியைக் கொண்டாட வேண்டும்” என்று அமைச்சர் கருப்பணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.கொரோனா வைரஸ் பரவலை தடுக்கவும் காற்று மாசினை கட்டுப்படுத்தவும் மாசராஜஸ்தான், ஒடிசா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களின் அரசுகள் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ளது.
அந்த மாநில அரசுகள் பட்டாசு தடையை நீக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.