தண்ணீர் டிரம்பில் எடுத்துச் செல்லப்பட்ட சிறுமியின் சடலம் – திருச்செந்தூர் அதிர்ச்சி

காட்டுப்பகுதியில் உள்ள ஓடையின் கீழ் 7 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட தகவல் திருச்செந்தூர் அருகே உள்ள மெஞ்ஞானபுரத்தில் காட்டு தீ போல பரவியுள்ளது.


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை அடுத்த மெஞ்ஞானபுரம் அருகே அமைந்துள்ள வடலிவிளையில் உள்ள காட்டுப்பகுதியில் 7-வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சிறுமியின் உடலை மீட்ட சாத்தான்குளம் போலீசார் சிறுமியின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.


மெஞ்ஞானபுரம் அருகே உள்ள கல்விளை இந்திராநகரை சேர்ந்தவர் சேகர். இவரின் மகள் 7வயது சிறுமி. இவர் அந்தப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தார். ஊரடங்கு காரணமாக பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்தார்.


காலையில் கடைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. அதனால் சிறுமியின் பெற்றோரும் உறவினர்களும் அவரை பல இடங்களில் தேடிவந்தனர். சிறுமியைக் காணவில்லை என்ற தகவல் காட்டு தீ போல பரவியது.

இந்தநிலையில் மதியம் 1 மணியளவில் வடலிவிளையில் உள்ள இசக்கி அம்மன் கோயில் அருகே உள்ள ஓடை பாலத்தின் கீழ் சிறுமி சடலமாக கிடப்பதாக தகவல் கிடைத்தது. உடனடியாக அங்குச் சென்ற சிறுமியின் பெற்றோரும் உறவினர்களும் கதறி அழுதனர்.


இந்தத் தகவல் சிறுமியின் சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக தகவல் பரவியது. அதனால் கிராம மக்கள் ஆவேசமடைந்தனர். அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். சிறுமியின் பெற்றோர் சிலர் மீது சந்தேகம் இருப்பதாக தகவல் கூறினர். அதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தண்ணீர் டிரம்மில் சிறுமியில் உடலை எடுத்துச் சென்றதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. டிரம்பை எடுத்துச் சென்றவர்களிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து தூத்துக்குடி எஸ்.பி ஜெயக்குமார், சிறுமி எப்படி கொலை செய்யப்பட்டார் என்ற தகவல் பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டில் தெரியவந்துவிடும். சந்தேகத்தின்பேரில் சிலரிடம் விசாரித்துவருகிறோம் என்றார்.

இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஜெயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *