திருப்பதியில் பழைய வாகனங்களுக்கு அனுமதியில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“திருமலையில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை தடுக்க தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி 10 ஆண்டுகள் கடந்த வாகனங்கள், தகுதி சான்றிதழ் இல்லாத வாகனங்கள் திருமலை மலைப்பாதையில் செல்ல அனுமதிக்கப்படாது.
அதாவது 2010-ம் ஆண்டுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்துக்கும் தடை விதிக்கப்படும். இதை பக்தர்கள் கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்” என்று திருப்பதி திருமலை கூடுதல் எஸ்பி முனி ராமய்யா தெரிவித்துள்ளார்.