‘திருமணத்துக்கு பிறகு அவமானங்களை சந்தித்தேன்’ – மகனை கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை

திருமண வாழ்க்கைப் பிடிக்காததால் மகனைக் கொன்ற தாய் தற்கொலை செய்த சம்பவம் திருப்பூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம்


திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா ஏத்தநாயக்கன்புதூரை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரின் மகன் மகுடீஸ்வரன் (34). இவருக்கும் நிலக்கோட்டை தாலுகா புதுஎட்டிமநாயக்கன்பட்டியை சேர்ந்த முனியாண்டி மகள் நித்யாவுக்கும் (24) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தர்ஷன் (1) என்ற மகன் உள்ளான்.

திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் மகுடீஸ்வரன் டெய்லராக வேலை பார்த்து வருகிறார். மனைவி, குழந்தையுடன் திருப்பூர் ஜெய் நகர் 2-வது வீதியில் உள்ள வீட்டில் அவர் குடியிருந்து வந்தார்.

குழந்தை கொலை


நித்யாவுக்கும் மகுடீஸ்வரனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் முற்றியது. அதனால் கோபித்துக் கொண்டு நித்யா, வீட்டில் சமையல் செய்யவில்லை. சம்பவத்தன்று மகுடீஸ்வரன் வேலைக்கு சென்று விட்டார்.
அவர் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பியபோது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்து. அதனால் கதவை தட்டினார். ஆனால் நீண்ட நேரமாக கதவு திறக்கப்படவில்லை. அதனால் கதவை உதவை உள்ளே சென்ற மகுடீஸ்வரனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டுக்குள் நித்யா சேலையில் தூக்கில் தொங்கி கொண்டு இருந்தார். கட்டிலில் தர்ஷன் இறந்து கிடந்தான்.

அடிக்கடி தகராறு


இது குறித்து ஊரக போலீசாருக்கு மகுடீஸ்வரன் தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் மீனாகுமாரி தலைமையிலா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நித்யா, தர்ஷன் ஆகியோரின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய
முதற்கட்ட விசாரணையில் நித்யாவுக்கு மகுடீஸ்வரனுடன் வாழப் பிடிக்கவில்லை. அதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது.

இதுகுறித்து திருப்பூர் போலீசார் கூறுகையில், கணவன், மனைவிக்கு இடையே ஒத்துக்போகாததால் அடிக்கடி தாய் வீட்டுக்கு நித்யா சென்றுள்ளார். அப்போதெல்லாம் நித்யாவின் பெற்றோர் மகளுக்கு அறிவுரைக்கூறி கணவன் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த நித்யா, தன்னுடைய ஒரு வயது குழந்தை தர்ஷனையும் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.

அதனால் முதலில் தர்ஷனை தலையணையால் அமுக்கி கொலை செய்துள்ளார். பின்னர் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார் திருமணமாகி 2 ஆண்டுகள் மட்டுமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது. ஆர்டிஓ அளிக்கும் விசாரணை அறிக்கை அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

நித்யா கடிதம்


நித்யா எழுதிய கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, “திருமணத்திற்கு பிறகுதான் நான் இவ்வளவு அவமானத்தை கண்டேன். நான் ஒரு ஏழை பெண். என்னை அவமானம் செய்த என் அத்தை, மாமா, என் கணவரைக் என் சாவுக்கு காரணம் எனக் குறிப்பிடலாம். ஆனால் யாரையும் குறிப்பிட விரும்பவில்லை. அவர்கள் கண்டிப்பாக இதற்கு தண்டனை பெறுவார்கள்.

என்னோட சாவுக்கு யாரையும் குற்றவாளியாக நினைக்கவில்லை நான் விருப்பமாய் சாக நினைக்கிறேன். நான் அடைந்த துன்பத்தையும் அவமானத்தையும் அவர்கள் கண்டிப்பாக அடைவார்கள். காலம் பதிலளிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.


மகளின் சாவுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நித்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவல் நிலையம் முன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமரசப்படுத்தினர். ஒரு வயது மகனைக் கொலை செய்து விட்டு தாயும் தற்கொலை செய்த சம்பவம் திருப்பூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *