திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதியுடன்கூடிய 80 படுக்கைகள் கொண்ட சிறப்பு சிகிச்சை மையத்தை பால்வளத் துறை அமைச்சர் நாசர் கடந்த புதன்கிழமை தொடங்கிவைத்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நாள்தோறும் 2,100 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது 400 பேருக்கு மட்டுமே தொற்று ஏற்படுகிறது. 100 பேருக்கு பரிசோதனை செய்தால் 6 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது என்று அமைச்சர் நாசர் தெரிவித்தார்.