இந்தியாவில் 75,829 பேர்.. தமிழகத்தில் 5,489 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும்இன்று 75,829 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதன்மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 65,49,373 ஆக உயர்ந்துள்ளது. இதில் 55,09,766 பேர் குணமடைந்துள்ளனர்.
மருத்துவமனைகளில் 9,37,625 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து 13-வது நாளாக கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 10 லட்சத்துக்குள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.ஒரே நாளில் 940 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,01,782 ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று 14,348 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 14,30,861 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 11,34,555 பேர் குணமடைந்துள்ளனர். 2,58,548 பேர் சிகிச்சையில் உள்ளனர். 37,758 பேர் உயிரிழந்துள்ளனர்.
கர்நாடகாவில் நேற்று 9,886 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 6,30,516 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதில் 5,08,495 பேர் குணமடைந்துள்ளனர். 1,12,802 பேர் சிகிச்சையில் உள்ளனர். 9,219 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளாவில் இன்று 8,553 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,29,886 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 1,44,471 பேர் குணமடைந்துள்ளனர். 84,497 பேர் சிகிச்சையில் உள்ளனர். 836 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திராவில் நேற்று 6,224 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 7,13,014 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 6,51,791 பேர் குணமடைந்துள்ளனர்.
55,282 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 5,941 பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் 47,823 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று 5,489 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதன்மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,19,996 ஆக உயர்ந்துள்ளது. இதில் 5,64,092 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று 66 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதன்மூலம் உயிரிழப்பு 9,784 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று 1,348 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. தலைநகரில் வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கோவையில் 474 பேர்,செங்கல்பட்டில் 381 பேர், தஞ்சாவூரில் 242 பேர், திருவள்ளூரில் 197 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அசாமில் 33,933 பேர், ஒடிசாவில் 30,301 பேர், சத்தீஸ்கரில் 29,292 பேர், தெலங்கானாவில் 27,901 பேர், மேற்குவங்கத்தில் 27,130 பேர், டெல்லியில் 25,234 பேர், ராஜஸ்தானில் 21,075 பேர்,
மத்திய பிரதேசத்தில் 19,807 பேர், குஜராத்தில் 16,762 பேர், காஷ்மீரில் 15,646 பேர், பஞ்சாபில் 14,289 பேர், ஹரியாணாவில் 12,868 பேர், பிஹாரில் 11,597 பேர், ஜார்க்கண்டில் 10,939 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.