தமிழக சட்டப்பேரவை 11-ம் தேதி கூடுகிறது

தமிழக சட்டப்பேரவை வரும் 11-ம் தேதி கூடுகிறது.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. மே 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் திமுக அபார வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த வெள்ளிக்கிழமை தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து சென்னை கலைவாணர் அரங்கில் வரும் 11-ம்தேதி காலை 10 மணிக்கு புதிய சட்டப்பேரவை  கூடுகிறது. அப்போது புதிய எம்எல்ஏக்கள் பதவி பிரமாணம் மேற்கொள்ள உள்ளனர். இதை தொடர்ந்து சட்டப்பேரவை தலைவர், துணைத்தலைவருக்கான தேர்தல் வரும் 12-ம் தேதி நடைபெறும் என்று சட்டப்பேரவை செயலாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *