தமிழக காங்கிரஸ் தலைவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குடியரசு துணை தலைவர் வெங்கைய நாயுடு உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பிரபலருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது ஒரு நாளைக்கு 1,400-க்கும் குறைவானவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில், காங்கிரஸின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது