அறுவை சிகிச்சைகளை ஒத்திவைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அதிகம் தேவைப்படுகிறது.
எனவே அவசரமில்லாத அறுவை சிகிச்சைகளை அனைத்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் ஒத்தி வைக்க வேண்டும் என்று மருத்துவ சேவைகள் துறை இயக்குநர் குருநாதன் உத்தரவிட்டுள்ளார்.