தியேட்டர்களில் 50% இருக்கைகளை நிரப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வரும் 10-ம் தேதி முதல் தியேட்டர்களை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பான வழிகாட்டு நெறிகளை தலைமைச் செயலாளர் கே.சண்முகம் அரசாணையாக வெளியிட்டுள்ளார்.
“கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டு பகுதிகளில் தியேட்டர்களை திறக்க அனுமதியில்லை. திரையரங்குக்கு வெளியிலும் உள்ளேயும் 6 அடி தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். திரையரங்க வளாகத்துக்குள் முகக்கவசம் அணிவது கட்டாயம்.
நுழைவுவாயில், வெளியேறும் வாயிலிலும் கையால் தொடாமல் பயன்படுத்தும் வகையில் சானிடைர் இயந்திரங்களை நிறுவ வேண்டும். திரையரங்குக்கு வரும் பொதுமக்கள், பணியாளர்களுக்கு நாள்தோறும் உடல்வெப்ப நிலை பரிசோதனை நடத்த வேண்டும். பொதுமக்களிடம் கண்டிப்பாக செல்போன் எண்ணை பெற வேண்டும்.
ஒன்றுக்கும் மேற்பட்ட தியேட்டர்கள் உள்ள வளாகத்தில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுக்க ஒவ்வொரு காட்சிக்கும் இடையே போதிய காலஇடைவெளி இருக்க வேண்டும். சினிமா காட்சி இடைவெளியின்போது கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஏசி வெப்ப நிலை 20 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரையும் ஈரப்பதம் 40 முதல் 70 சதவீதம் வரையிலும் இருக்கலாம்” என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.