ரேஷனில் வெங்காயம் விற்க திட்டமிடப்பட்டுள்ளது.
வெங்காயம் அதிகம் விளையும் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மழை காரணமாக சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களில் தொடர் மழையால் பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வெங்காயம் அழுகி நாசமாகியுள்ளது.
இதனால் வரத்துக்கு குரைந்து தமிழகத்தில் பெரிய வெங்காயம் விலை கிலோ 100 ரூபாயை தாண்டியுள்ளது. இதையடுத்து கூட்டுறவு பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.45-க்கு விற்கப்படுகிறது.
இதன்பிறகும் விலை கட்டுக்குள் வராமல் உயர்ந்தால் ரேஷன் கடைகள் மூலமாக வெங்காயத்தை விற்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். வெங்காயத்தை பதுக்குவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.