ஆன்லைன் ரம்மிக்கு தடை.. முதல்வர் உறுதி…

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.

தமிழக முதல்வர் பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று கோவை சென்றார். அங்கு விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.

“ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பலர் தற்கொலை செய்து வருகின்றனர். இந்த ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. இதை ஏற்று ஆன்லைன் ரம்பி விளையாட்டுக்கு தடை விதிக்க அரசு நடவடிக்கை எடுக்கும். அரசின் நிலைப்பாடு நீதிமன்றத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேரின் விடுதலையில் தமிழக அரசு அக்கறையுடன் செயல்படுகிறது. தமிழகத்தில் பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்க முடியாது. பள்ளி, கல்லூரி திறப்பு குறித்து வரும் 9-ம் தேதி பெற்றோரின் கருத்துகள் கேட்டறியப்படும். அதற்கேற்க தமிழக அரசு முடிவு எடுக்கும்” என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *