இந்தியாவில் 81,484 பேர்.. தமிழகத்தில் 5,595 பேருக்கு கொரோனா

இந்தியாவில் 81,484 பேர்.. தமிழகத்தில் 5,595 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இன்று 81,484 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதன்மூலம் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63,94,068 ஆக உயர்ந்துள்ளது. இதில் 53,52,078 பேர் குணமடைந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் 9,42,217 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 1,095 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 99,773 ஆக உயர்ந்துள்ளது.

வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் நேற்று 16,476 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,00,922 ஆக அதிகரித்துள்ளது. இதில் 11,04,426 பேர் குணமடைந்துள்ளனர். 2,59,440 பேர் சிகிச்சையில் உள்ளனர். 37,056 பேர் உயிரிழந்துள்ளனர்.

2-வது இடத்தில் கர்நாடகா

2-வது இடத்தில் உள்ள கர்நாடகாவில் நேற்று 10,070 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 6,11,837 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4,92,412 பேர் குணமடைந்துள்ளனர். 1,10,431 பேர் சிகிச்சையில் உள்ளனர். 8,994 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கப்படுகிறது.

3-வது இடத்தில் உள்ள கேரளாவில் இன்று 9,258 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 2,13,499 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,35,44 பேர் குணமடைந்துள்ளனர். 77,482 பேர் சிகிச்சையில் உள்ளனர். 791 பேர் உயிரிழந்துள்ளனர்.

4-வது இடத்தில் உள்ள ஆந்திராவில் நேற்று 6,751 பேரிடம் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 7,00,235 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 6,36,508 பேர் குணமடைந்துள்ளனர். 57,858 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 5,869 பேர் உயிரிழந்துள்ளனர்.

5-வது இடத்தில் உள்ள உத்தர பிரதேசத்தில் 50,378 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

6-வது இடத்தில் தமிழகம்

6-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் இன்று 5,595 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,08,885 ஆக உயர்ந்துள்ளது. இதில் 5,52,938 பேர் குணமடைந்துள்ளனர். 46,294 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் இன்று 67 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 9,953 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று 1,278 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கோவையில் 495 பேர், செங்கல்பட்டில் 396 பேர், திருவள்ளூரில் 255 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அசாமில் 34,163 பேர், ஒடிசாவில் 31,163 பேர், சத்தீஸ்கரில் 30,468 பேர், தெலங்கானாவில் 28,620 பேர், டெல்லியில் 26,738 பேர், மேற்குவங்கத்தில் 26,738 பேர், ராஜஸ்தானில் 20,807 பேர், மத்திய பிரதேசத்தில் 20,473 பேர் கரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *