இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு ஒரு லட்சத்தை தாண்டியது

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு ஒரு லட்சத்தை தாண்டியது. நாடு முழுவதும் 79,476 பேர், தமிழகத்தில் 5,622 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இன்று 79 ஆயிரத்து 476 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதன்மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 64 லட்சத்து 73 ஆயிரத்து 706 ஆக உயர்ந்துள்ளது. இதில் 54 லட்சத்து 27 ஆயிரத்து 706 பேர் குணமடைந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் 9 லட்சத்து 44 ஆயிரத்து 996 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 1,069 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்து 842 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிரா முதலிடம்

வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் நேற்று 15 ஆயிரத்து 591 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 14 லட்சத்து 16 ஆயிரத்து 513 பேர் வைரஸால்

பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 11 லட்சத்து 17 ஆயிரத்து 720 பேர் குணமடைந்துள்ளனர். 2 லட்சத்து 61 ஆயிரத்து 313 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 37 ஆயிரத்து 480 பேர் உயிரிழந்துள்ளனர்.

2-வது இடத்தில் உள்ள கர்நாடகாவில் நேற்று 8 ஆயிரத்து 793 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 6 லட்சத்து 20 ஆயிரத்து 630 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 4 லட்சத்து 99 ஆயிரத்து 506 பேர் குணமடைந்துள்ளனர்.

ஒரு லட்சத்து 12 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 9 லட்சத்து 119 பேர் உயிரிழந்துள்ளனர்.

கேரளா 3-வது இடம்

3-வது இடத்தில் உள்ள கேரளாவில் இன்று 7 ஆயிரத்து 834 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 2 லட்சத்து 21 ஆயிரத்து 333 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதில் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 620 பேர் குணமடைந்துள்ளனர். 80 ஆயிரத்து 818 பேர் சிகிச்சையில் உள்ளனர். 813 பேர் உயிரிழந்துள்ளனர்.

4-வது இடத்தில் உள்ள ஆந்திராவில் நேற்று 6 ஆயிரத்து 555 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்கு 7 லட்சத்து 6 ஆயிரத்து 790 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 6 லட்சத்து 43 ஆயிரத்து 993 பேர் குணமடைந்துள்ளனர். 56 ஆயிரத்து 897 பேர் சிகிச்சையில் உள்ளனர். 5 லட்சத்து 900 பேர் உயிரிழந்துள்ளனர்.

5-வது இடத்தில் உள்ள உத்தர பிரதேசத்தில் 49 ஆயிரத்து 112 பேர் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

6-வது இடத்தில் தமிழகம்

6-வது இடத்தில் தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 622 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்து 14 ஆயிரத்து 507 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 5 லட்சத்து 58 ஆயிரத்து 534 பேர் குணமடைந்துள்ளனர். 46 ஆயிரத்து 255 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் இன்று 65 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 9 ஆயிரத்து 718 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் 1,364 பேர்

சென்னையில் இன்று 1,364 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. தலைநகரில் வைரஸ் தொற்று தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னை மாநகராட்சியின் 10 தெருக்கள் நோய் தொற்றுள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கோவையில் 486 பேர், செங்கல்பட்டில் 395 பேர், சேலத்தில் 351 பேர், திருவள்ளூரில் 290 பேர், தஞ்சாவூரில் 244 பேர், திருப்பூரில் 167 பேர், நாமக்கல்லில் 150 பேர்,

நீலகிரியில் 146 பேர், கடலூரில் 145 பேர், ஈரோட்டில் 144 பேர், திருவாரூரில் 143 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

அசாமில் 34 ஆயிரத்து 128 பேர், ஒடிசாவில் 31 ஆயிரத்து 331 பேர், சத்தீஸ்கரில் 29 ஆயிரத்து 693 பேர், தெலங்கானாவில் 28 ஆயிரத்து 328 பேர், மேற்குவங்கத்தில் 26 ஆயிரத்து 865 பேர், டெல்லியில் 26 ஆயிரத்து 450 பேர்,

ராஜஸ்தானில் 20 ஆயிரத்து 942 பேர், மத்திய பிரதேசத்தில் 20 ஆயிரத்து 124 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *