இந்தியாவில் 86,508 பேர்.. தமிழகத்தில் 5,692 பேருக்கு கொரோனா…

இந்தியாவில் 86,508 பேர்.. தமிழகத்தில் 5,692 பேருக்கு கொரோனா… வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இன்று 86,508 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதன்மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 57,32,518 ஆக உயர்ந்துள்ளது. இதில் 46,74,987 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 87,374 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

மருத்துவமனைகளில் 9,66,382 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் ஒரே நாளில் 1,129 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 91,149 ஆக உயர்ந்துள்ளது.

தேசிய அளவிலான கொரோனா வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் நேற்று 21,029 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 12,63,799 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 9,56,030 பேர் குணமடைந்துள்ளனர். 2,73,883 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 479 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 33,886 ஆக அதிகரித்துள்ளது.

2-வது இடத்தில் உள்ள கர்நாடகாவில் நேற்று 6,997 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 6,46,530 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 4,37,910 பேர் குணமடைந்துள்ளனர். 94,671 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 8,266 பேர் உயிரிழந்துள்ளனர்.

3-வது இடத்தில் உள்ள ஆந்திராவில் நேற்று 7,228 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 6,46,530 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 5,70,667 பேர் குணமடைந்துள்ளனர். 70,357 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 5,506 பேர் உயிரிழந்துள்ளனர்.

4-வது இடத்தில் உள்ள உத்தர பிரதேசத்தில் நேற்று 5,143 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்கு 3,69,686 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3,02,689 பேர் குணமடைந்துள்ளனர். 61,698 பேர் சிகிச்சையில் உள்ளனர். 5,299 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஐந்தாவது இடத்தில் உள்ள தமிழகத்தில் இன்று 5,692 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,63,691 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 5,08,210 பேர் குணமடைந்தனர். 46,405 பேர் சிகிசையில் உள்ளனர்.
தமிழகத்தில் இன்று 66 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்தமாக 9,076 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்று 1,089 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. கோவையில் 642 பேர், செங்கல்பட்டில் 299 பேர், திருவள்ளூரில் 265 பேர், கடலூரில் 250 பேர், காஞ்சிபுரத்தில் 196 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் இன்று 6,324 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த மாநிலத்தில் முதல்முறையாக 6 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

மாநிலத்தில் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,54,456 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,07,850 பேர் குணமடைந்துள்ளனர். 45,919 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 613 பேர் உயிரிழந்துள்ளனர்.

சத்தீஸ்கரில் 35,850 பேர், ஒடிசாவில் 34,547 பேர், டெல்லியில் 30,836 பேர், அசாமில் 30,182 பேர், தெலங்கானாவில் 30,037 பேர், மேற்குவங்கத்தில் 25,101 பேர், பஞ்சாபில் 21,230 பேர், காஷ்மீரில் 19,918 பேர், ஹரியாணாவில் 19,276 பேர், ராஜஸ்தானில் 18,992 பேர், குஜராத்தில் 16,438 பேர், பிஹாரில் 12,958 பேர், ஜார்க்கண்டில் 12,882 பேர், உத்தராகண்டில் 11,867 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *