குறைகளையும் சுட்டிக்காட்ட வேண்டிய தருணம் இது – டிஜிபி சைலேந்திரபாபு கவலை

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்ட புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,

2021-ம் ஆண்டு பல்வேறு சவால்கள் தோன்றின. காவல்துறையினர் அவற்றை வழக்கமான தைரியமுடனும் தீர்க்கமான முடிவுடனும் எதிர்கொண்டனர். ஜல்லிக்கட்டு, தேவர் குரு பூஜை, இம்மானுவேல் சேகரன் நினைவு நாள், மதுரை சித்திரை திருவிழா, திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபம் போன்ற பெரிய நிகழ்வுகள் அனைத்தும் அமைதியாக நடந்து முடிந்தன.

சட்டம் ஒழுங்கு நன்கு பராமரிக்கப்பட்டது. குற்றபுலன் விசாரணை திறமையாக மேற்கொள்ளப்பட்டன. அமலாக்கப்பணி மிகவும் மேம்படுத்தப்பட்டது. காவல் அதிகாரிகள், காவலர்கள் ஒவ்வொரு சூழ்நிலையிலும் மிகச்சிறப்பாக செயல்பட்டதன் காரணமாகவே இந்த இலக்குகளை அடைய முடிந்தது.

தென்மாநிலங்களில் சாதிய படுகொலைகள் வடதமிழகத்தில் ரவுடிகள் பழிக்குப்பழி கொலைகள் தலைதூக்கிய போது தமிழக காவல்துறை அந்த மோதல் சூழ்நிலையை மிகச்சிறப்பாக எதிர்கொண்டது. ஆபரேஷன் ரவுடி வேட்டை மூலம் 3325 குற்றவாளிகள் பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டனர். 1117 பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. போதை மருந்துகளை ஒழிக்கும் நடவடிக்கைகளில் 23 டன் கஞ்சா, 20 கிலோ ஹெராயின் போதை மருந்துகள் கைப்பற்றப்பட்டன. கோவிட் 19-ன் இரண்டாம் அலைக்கு எதிரான போரில் பங்கேற்றதில் தமிழக காவல் துறையைச் சேர்ந்த 139 காவலர்கள் கோவிட் தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

காவல் நிலையாணையில் திருத்தம் செய்து காவலர்களுக்கு வாரம் ஒருநாள் விடுமுறை வழங்கியது காவல் குடியிருப்பின் அளவை 750 சதுர அடியாக உயர்த்தியது. சிறு தண்டனைகளின் மேல் நடவடிக்கை கைவிட்டது சூழுழனு:று சுருது:துரு ஆணைகளை பிறப்பித்த முதல்வருக்கு மனமார நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

காவலர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையிலான 1500 அரசு வேலையும் தனியார் நிறுவனங்களில் 1067 பேருக்கு வேலையும் பெற்று தந்துள்ளோம். காவலர்களின் நலம் பேணுவது நமது ஒரு முக்கிய கடமையாக உள்ளது. தற்போது பயிற்சி மேற்கொண்டு வரும் 989 காவல் உதவியாளர்கள், புதிதாக நியமனம் செய்யப்பட்டுளு;ள பத்தாயிரம் காவலர்கள் ஆகியோர் மூலம் தமிழக காவல் படை இளமையாகவும் உற்சாகத்துடன் விளங்கும். தொழிற்நுட்ப நுண்ணறிவு கொண்ட இந்த இளம் அதிகாரிகள் பொதுமக்களிடம் இன்னும் கனிவுடனும் கண்ணியத்துடனும் மனிதாபிமானத்துடனும் நடந்து கொள்வார்கள்.

நமது குறைகளையும் சுட்டிக்காட்ட வேண்டிய தருணம் இதுவாகும். சில காவல் அதிகாரிகள் பொதுமக்களிடம் நடந்து கொள்ளும் விதம் திருப்திகரமானதாக இல்லை. காவல் பாதுகாப்பில் வன்முறை கவலையளிப்பதாக உள்ளது. எல்லா குற்றங்களும் பதிவு செய்யப்படுவதில்லை என்ற புகார்கள் இன்னும் உள்ளன.

நேர்மை, தைரியம் நேர்த்தி பணிசார்ந்த நெறிமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் முன்மாதிரியாக இருந்து காவலர்களை வழிநடத்துவது ஒவ்வொரு உயர்அதிகாரியின் கடமையாகும். எனவே இந்தத் கண்ணியமிக்க படையின் உறுப்பினருக்குப் பொருந்தாத எந்தச் செயலையும் எந்த அதிகாரியும் எந்தத் தருணத்திலும் செய்யக்கூடாது.

கல்வி கூடங்களின் அருகில் போதை மருந்துகள் விற்பனை குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள், சாலை விபத்துக்கள், கணினி வழிக்குற்றங்கள் ஆகியவை வரும் ஆண்டில் நாம் சந்திக்கவுள்ள சவால்கள் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

குற்றங்கள் குற்றவாளிகள் எதிர்மறையான திட்டமிட்ட விஷமப் பிரசாரங்கள் ஆகியவற்றுக்கெதிரான போரில் நமது முழுத்திறமை மற்றும் அறிவுடன் போராடுவோம். அப்போது நாம் நமது இதயத்தில் எந்தவித தீய எண்ணமுமின்றி விருப்பு வெறுப்புமின்றி நடந்து கொள்வோம் எனவும் நான் நம்புகிறேன். எங்கும் எப்போதும் ஒழுங்கையும் அமைதியையும் நிலை நாட்ட நாம் கடமைப்பட்டுள்ளோம்.

நிகழ்காலத்தல் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் எதிர்காலத்தில் பெருத்த நம்பிக்கையுடனும் புத்தாண்டில் காலெடுத்து வைக்கும் மதிப்புமிக்க தமிழ்நாடு காவல்துறையை வழிநடத்திச் செல்வது மிகப்பெரிய பொறுப்பாகும். அந்தக் கடமையை சரிவர செய்து முடிக்க எனக்குத் துணை நிற்பீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

உங்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்று கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *