தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
“வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யக்கூடும்.
மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, விருதுநகர், தென்காசி, நீலகிரி, கோவை, திருப்பூரில் மலைப்பகுதியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ஏனைய மாவட்டங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.