பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வழியாக பாடங்களை கற்பிக்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இன்று தொடங்கிவைத்தார்.
இதன்படி திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை நாள்தோறும் இரண்டரை மணி நேரம் பாடங்கள் ஒளிபரப்பு செய்யப்படும். இதற்கான கால அட்டவணை விரைவில் வெளியிடப்பட உள்ளது.
மேலும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகம் வழங்கும் திட்டத்தையும் முதல்வர் தொடங்கிவைத்தார். 12-ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு இ-லெக்சர் வகுப்புகளை லேப்டாப்பில் பதிவேற்றம் செய்து கொடுக்கும் திட்டத்தையும் முதல்வர் தொடங்கிவைத்தார்.
இந்த விழாவில் பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன், தலைமைச் செயலாளர் சண்முகம், பள்ளி கல்வி முதன்மை செயலாளர் தீரஜ்குமார் பங்கேற்றனர்.
பள்ளிகளை எப்போது திறக்க வேண்டும். பள்ளிகளை திறக்கும்போது என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து 16 பேர் குழு ஆய்வு செய்தது. இந்த குழுவின் அறிக்கையை பள்ளிக் கல்வி ஆணையர் தாமஸ் வைத்யன் முதல்வரிடம் இன்று சமர்ப்பித்தார்.
