மின்சார ஒழுங்குமுறை ஆணைய அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மின் கட்டண நிர்ணயத்துக்கான பரிந்துரை, மின்சாரம் குறித்த புகார்கள் மீதான விசாரணையை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
இந்த ஆணையம், சென்னை எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் இயங்கி வந்தது.
தற்போது சென்னை கிண்டி திருவிக தொழிற்பேட்டையில் உள்ள சிட்கோ தலைமை நிர்வாக அலுவலக கட்டிடத்தின் 4-வது தளத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய அலுவலகமும், மின் குறைதீர்ப்பாளர் அலுவலகமும் புதிய முகவரியில் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.