ஆதார் எண்ணை பதிவு செய்ய டிஎன்பிஎஸ்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழக அரசின் குருப் 1 முதல் குரூப் 4 வரை பல்வேறு தேர்வுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்துகிறது. டிஎன்பிஎஸ்சியின் போட்டித் தேர்வுகளை எழுதும் மாணவர்கள் அதன் இணையத்தில் நிரந்தரமாக பதிவு செய்து கொள்ளலாம்.
அவ்வாறு டிஎன்பிஎஸ்சி -ல் பதிவு செய்துள்ள அனைத்து விண்ணப்பதாரரும் தங்களது நிரந்தர பதிவுடன் ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும். இதுதொடர்பான முழுமையான விவரங்கள் www.tnpscexams.in இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.