சான்றிதழ் பதிவேற்றம் செய்ய டிஎன்பிஎஸ்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.
“தடய அறிவியல் துறையில் இளநிலை அறவியல் அதிகாரி பணிக்கான தேர்வில் தேர்வானவர்கள், ஒருங்கிணைந்த என்ஜினீயரிங் பணிகளுக்கு தேர்வானவர்கள், தமிழக சிறை துறையின் ஜெயிலர் பணிக்கு தேர்வானவர்கள் தங்களின் அசல் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் இ-சேவை மையங்கள் மூலமாக வரும் 14-ம் தேதிக்குள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாவிட்டால் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்படும்” என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.