டி.என்.பி.எஸ்.சி. இணையதளம் பல்வேறு புதிய வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை டி.என்.பி.எஸ்.சி. நடத்தி வருகிறது. போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களின் நலன் கருதி டிஎன்பிஎஸ்சி www.tnpsc.gov.in இணையதளம் பல்வேறு புதிய வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இணையத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து தகவல்களும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ளன. பார்வை குறைபாடு உடையவர்களும் தங்களுக்கு தேவையான தகவல்களை தெரிந்து கொள்ளும் வகையில் இணையதளம் வடிவமைக்கப்பட்டிருப்பதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.