தமிழகத்தில் இன்று புதிதாக 5 ஆயிரத்து 864 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 40 ஆயிரத்தை எட்டியுள்ளது.
மாவட்டவாரியாக சென்னையில் புதிதாக ஆயிரத்து 175 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 354, திருவள்ளூரில் 325, கோவையில் 303, திருநெல்வேலியில் 277, ராணிப்பேட்டையில் 272, தேனியில் 261 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 178 பேர் குணமடைந்துள்ளனர். 57 ஆயிரத்து 962 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 97 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 3,838 ஆக உயர்ந்துள்ளது.