தமிழகத்தில் இன்று 5,879 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 879 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 51 ஆயிரத்து 738 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 966 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 56 ஆயிரத்து 738 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


மாவட்ட வாரியான பாதிப்பில் மிக அதிகபட்சமாக சென்னையில் இன்று ஆயிரத்து 74 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. காஞ்சிபுரத்தில் 368, தேனியில் 327, திருவள்ளூரில் 305 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 99 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 ஆயிரத்து 34 ஆக உயர்ந்திருக்கிறது.


கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 55 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது. எனினும் பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *