இந்தியாவில் 38,310 பேர்.. தமிழகத்தில் 2,435 பேருக்கு கொரோனா…

இந்தியாவில் 38,310 பேர்.. தமிழகத்தில் 2,435 பேருக்கு கொரோனா…வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இன்று 38,310 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதன்மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 82,67,623 ஆக உயர்ந்துள்ளது. இதில் 76,03,121 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 58,323 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தேசிய அளவில் கரோனா தொற்றில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கை 91.96 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மருத்துவமனைகளில் 5,41,405 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 490 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிவப்பு 1,23,097 ஆக அதிகரித்துள்ளது.

தேசிய அளவிலான வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் நேற்று 4,009 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 16,87,784 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 15,24,304 பேர் குணமடைந்துள்ளனர். 1,19,352 பேர் சிகிச்சையில் உள்ளனர். 44,128 பேர் உயிரிழந்துள்ளனர்.

2-வது இடத்தில் உள்ள கர்நாடகாவில் புதிதாக 2,576 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 8,29,640 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 7,73,595 பேர் குணமடைந்துள்ளனர். 44,824 பேர் சிகிச்சையில் உள்ளனர். 11,221 பேர் உயிரிழந்துள்ளனர்.

3-வது இடத்தில் உள்ள ஆந்திராவில் புதிதாக 1,916 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 8,27,882 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 7,98,625 பேர் குணமடைந்துள்ளனர். 22,538 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 6,719 பேர் உயிரிழந்துள்ளனர்.

4-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் இன்று 2,435 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. மாநிலத்தில் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,31,542 ஆக உயர்ந்துல்ளது. இதில் 7,01,527 பேர் குணமடைந்துள்ளனர். 19,201 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று 31 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 11,214 ஆக அதிகரித்துல்ளது. சென்னையில் இன்று 669 பேர், கோவையில் 238 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. 

5-வது இடத்தில் உள்ள உத்தர பிரதேசத்தில் நேற்று 1,777 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்கு 4,85,609 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 4,55,498 பேர் குணமடைந்துள்ளனர். 23,035 பேர் சிகிச்சையில் உள்ளனர். 7,076 பேர் உயிரிழந்துள்ளனர்.

6-வது இடத்தில் உள்ள கேரளாவில் இன்று 6,862 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தில் 4,51,131 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3,64,745 பேர் குணமடைந்துள்ளனர். 84,713 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,559 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *