வெளியே வராதீங்க..விரட்டிப் பிடிப்பாங்க…

தமிழகத்தில் 7-ம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் தொடங்கியுள்ளது. இந்த மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வில்லாத ஊரடங்கு அமல் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதன்படி இந்த மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை தளர்வில்லா ஊரடங்கு அமல் செய்யப்படுகிறது.
அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி கண்காணிப்பை தீவிரப்படுத்த போலீஸாருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பால் விநியோகம், மருந்தகங்கள், மருத்துவமனை வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் மட்டுமே சாலையில் செல்ல அனுமதிக்கப்படும். அவசர தேவைக்காக மட்டும் தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.


கடந்த மாதம் போலவே ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *