கொரோனா.. ஒரே நாளில் 64,531 பேருக்கு தொற்று…

கடந்த 7-ம் தேதி முதல் நாள்தோறும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு வருகிறது. கடந்த 11-ம் தேதி மட்டும் 53,000 தொற்றி பதிவானது.

இதன்பிறகு நேற்று முன்தினமும் நேற்றும் 60 ஆயிரத்துக்கு கீழ் வைரஸ் தொற்று குறைந்தது. இன்று மீண்டும் புதிய கொரோனா தொற்று 60 ஆயிரத்தை தாண்டி எகிறி குதித்துள்ளது.


மத்திய சுகாதாரத் துறை இன்று காலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில், நாடு முழுவதும் ஒரே நாளில் 64 ஆயிரத்து 531 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி கொரோனா மருத்துவமனையில் நோயாளிகளிடம் நலம் விசாரிக்கும் உள்ளூர் அரசியல் தலைவர்கள்.
டெல்லி கொரோனா மருத்துவமனையில் நோயாளிகளிடம் நலம் விசாரிக்கும் உள்ளூர் அரசியல் தலைவர்கள்.


இதன்மூலம் ஒட்டுமொத்த வைரஸ் பாதிப்பு 27 லட்சத்து 67 ஆயிரத்து 273 ஆக உயர்ந்துள்ளது. இதில் 20 லட்சத்து 37 ஆயிரத்து 870 பேர் குணமடைந்துள்ளனர்.

6 லட்சத்து 76 ஆயிரத்து 514 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரே நாளில் 1,092 பேர் உயிரிழந்தனர்.

இதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 52 ஆயிரத்து 889 ஆக உயர்ந்துள்ளது.


தேசிய அளவிலான வைரஸ் பாதிப்பில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

அந்த மாநிலத்தில் நேற்று 11 ஆயிரத்து 119 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை 6 லட்சத்து 15 ஆயிரத்து 477 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 ஆயிரத்து 687 பேர் உயிரிழந்துள்ளனர்.

மும்பை கொரோனா வார்டில் சகோதர பாசத்தை கொண்டாடும் ரக்சா பந்தன் விழா கொண்டாடப்பட்டது. அப்போது இளைஞர் ஒருவருக்கு இளம்பெண், ராக்கி கயிறு கட்டினார்.


அண்டை மாநிலமான ஆந்திராவில் நேற்று 9 ஆயிரத்து 652 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் இதுவரை 3 லட்சத்து 6 ஆயிரத்து 261 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 2 ஆயிரத்து 820 பேர் உயிரிழந்துள்ளனர்.


மற்றொரு அண்டை மாநிலமான கர்நாடகாவில் நேற்று 7 ஆயிரத்து 665 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்கு 2 லட்சத்து 40 ஆயிரத்து 948 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 ஆயிரத்து 201 பேர் உயிரிழந்துள்ளனர்.

மும்பையில் ஆம்புலன்ஸ் வாகனம் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்படுகிறது.


தமிழகத்தில் நேற்று 5 ஆயிரத்து 709 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒட்டுமொத்த வைரஸ் பாதிப்பு 3 லட்சத்து 49 ஆயிரத்து 654 ஆக உயர்ந்துள்ளது.


கேரளாவில் நேற்று 1,758 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை 47 ஆயிர்தது 898 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 175 பேர் உயிரிழந்துள்ளனர்.


உத்தர பிரதேசத்தில் 1,58,216 பேர், மேற்குவங்கத்தில் 1,19,578 பேர், பிஹாரில் 1,06,307 பேர், தெலங்கானாவில் 93,937 பேர், குஜராத்தில் 79,710 பேர் , அசாமில் 79,667 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *