நாளை காய்கறி, மளிகை கடைகள் மூடப்படும்

தமிழகத்தில் நாளை தளர்வற்ற ஊரடங்கு அமல் செய்யப்படுகிறது.


கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் வரும் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


எனினும் இந்த மாதத்தின் 4 ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வற்ற ஊரடங்கு அமல் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி நாளை எந்த கடைகளும் திறக்க அனுமதிக்கப்படாது. காய்கறி, மளிகை கடைகளும் மூடப்படும். பால், மருந்து கடைகள் மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *