தமிழகத்தில் நாளை நீட் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது.
எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. தேசிய அளவில் 15.97 லட்சம் பேர் தேர்வை எழுத விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட 14 நகரங்களில் 236 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 990 பேர் தேர்வு எழுத உள்ளனர்.