தாய்மார்களே.. நாளை போலியோ தடுப்பு முகாம்…

தாய்மார்களே.. நாளை போலியோ தடுப்பு முகாம்… நடைபெறுகிறது. 

இந்தியாவில் போலியோவை ஒழிக்க 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் 2 தவணைகளில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது. போலியோ ஒவிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ள நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக, ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் கடந்த 17-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 16-ம் தேதி தொடங்கியதால் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் தள்ளி வைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் ஜனவரி 31-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் 43,000 மையங்களில் 70 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்டப்பட உள்ளது.

கொரோனா அறிகுறிகளான சளி, இருமல், காய்ச்சல் ஆகியோவை இருக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்தை தவிர்க்க வேண்டும். கொரோனாவில் இருந்து மீண்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்டலாம் என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *