நிவர் புயலால் நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புயல் நிவாரண பணிகள் தொடர்பாக முதல்வர் பழனிசாமி சென்னையில் இன்று உயர்நிலை ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இதன்பிறகு செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.
“நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் நவம்பர் 25-ம் தேதி புதன்கிழமை பொது விடுமுறை விடப்படுகிறது. அத்தியாவசிய பணிகளில் உள்ள அரசு அலுவலர்கள் மட்டுமே பணியாற்றுவார்கள். மழை பொழிவை பொறுத்து சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரியை திறப்பது குறித்து முடிவு செய்யப்படும். கல்வி நிலையங்கள், திருமண கூடங்கள் நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன” என்று முதல்வர் பழனிசாமி கூறினார்.
புதுச்சேரியிலும் புதன்கிழமை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவும் அமல் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீடுகளைவிட்டு வெளியே வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.