கிராம அஞ்சல் ஊழியர் பணிக்கு செப். 30-க்குள் விண்ணப்பிக்கலாம்

கிராம அஞ்சல் ஊழியர் பணிக்கு செப்.30-க்குள் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு அஞ்சல் துறையில் 3 ஆயிரத்து 162 அஞ்சல் ஊழியர்கள் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி பயிற்சி சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும். வயது வரப்பு 18-ல் இருந்து 40-க்குள் இருக்க வேண்டும். ஊதியம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.14,500 வரை வழங்கப்படும்.

இந்தப் பணிக்கு செப்.30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு https://appost.in/gdsonline/ இணையதளத்தில் விவரங்களை அறிந்து கொள்ளலாம் என்று அஞ்சல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *