நம்பர் 1 இடத்தில் நடிகர் விஜய் – ஆர்மாக்ஸ் மீடியா கணிப்பு

தமிழகத்தின் பிரபலமான நடிகர் என்ற வகையில் விஜய் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அஜித் குமார் 2-வது இடத்திலும் ரஜினி காந்த் 3-வது இடத்திலும் உள்ளனர்.

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஆர்மாக்ஸ் மீடியா தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகர் குறித்து கருத்து கணிப்பு நடத்தி அண்மையில் தனது முடிவுகளை வெளியிட்டுள்ளது.


ஆர்மாக்ஸ் மீடியா வெளியிட்டுள்ள பட்டியலில் நடிகர் விஜய் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அஜித் குமார் 2-வது இடத்தையும் நடிகர் ரஜினி காந்த் 3-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.


நடிகர்கள் சூர்யா, விஜய் சேதுபதி, கமலஹாசன், சிவகார்த்திகேயன், தனுஷ், அல்லு அர்ஜுன், பிரபாஸ் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *