ரத்தான ரயில் டிக்கெட்.. 6 மாதம் அவகாசம்…

ரத்தான ரயில் டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெற 6 மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

நிவர் புயல் காரணமாக பல்வேறு விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. 

“ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கான கட்டணம் முழுவதுமாக திருப்பி அளிக்கப்படும். டிக்கெட் கட்டணத்தை திரும்பப் பெற 6 மாத காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இணையதள முன்பதிவு டிக்கெட் தானாகவே ரத்து செய்யப்பட்டு வங்கிக் கணக்கில் திருப்பி செலுத்தப்படும். 

முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கு 6 மாதங்கள் அவகாசம் உள்ளது. பயணிகள் அவசரமாக ரயில்வே முன்பதிவு டிக்கெட் கவுன்ட்டர்களுக்கு வர வேண்டாம்” என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *