திருவள்ளூர் மாவட்டத்தில் திருநங்கைகள் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க அக். 9-ல் சிறப்பு முகாம்

திருவள்ளூர் மாவட்டத்தில் திருநங்கைகள் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க அக். 9-ல் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் திருநங்கைகளுக்கு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முன்னுரிமை அடிப்படையில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் அக். 9-ம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுவரை ரேஷன் கார்டு பெறாத திருநங்கைகள், முகாமில் விண்ணப்பித்து பயன் அடையலாம் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *