நடிகர் அர்ஜுன் மருமகனின் நினைவேந்தல் – நடிகை மேக்னா, குடும்பத்தினர் பங்கேற்பு

கன்னட திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் சிரஞ்சீவி சார்ஜா. இவர் நடிகர் அர்ஜுனின் மருமகன் ஆவார். கடந்த 2018-ம் ஆண்டில் சிரஞ்சீவி சார்ஜாவுக்கும் நடிகை மேக்னா ராஜுவுக்கும் திருமணம் நடைபெற்றது. இருவரும் பெங்களூரில் வசித்து வந்தனர். மேக்னா ராஜ் 3 மாத கர்ப்பமாக உள்ளார்.


சிரஞ்சீவி சார்ஜா தமிழ் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் அவரது மனைவி மேக்னா ராஜ் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா உள்ளிட்ட தமிழ் படங்களில் அவர் நடித்துள்ளார்.


திருமணமாகி 2 ஆண்டுகளே ஆன நிலையில் கடந்த ஜூன் 6-ம் தேதி சிரஞ்சீவி சார்ஜாவுக்கு திடீரென நெஞ்சுவலி, மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த ஜூன் 7-ம் தேதி சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். கடந்த ஜூன் 8-ம் தேதி சிரஞ்சீவி சார்ஜாவின் இறுதிச் சடங்கு நடைபெற்றது.


அவர் மறைந்து இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைகிறது. இதையொட்டி பெங்களூருவில் உள்ள வீட்டில் இன்று நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவி மேக்னா ராஜ் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *