20 கி.மீ. சைக்கிளில் ரோந்து சென்ற திருச்சி டிஐஜி ஆனி விஜயா

திருச்சியில் ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்படுகிறதா என்பது குறித்து டிஐஜி ஆனி விஜயா இன்று 20 கி.மீ. தொலைவுக்கு சைக்கிளில் ரோந்து பணி மேற்கொண்டார்.

இன்று தளர்வற்ற ஊரடங்கு


கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வற்ற முழுஊரடங்கு அமல் செய்யப்பட்டு வருகிறது.

இதன்படி தமிழகம் முழுவதும் இன்று முழுஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. சென்னை, திருச்சி, கோவை, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி உட்பட அனைத்து மாவட்டங்களிலும் நகரங்கள், கிராமங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
திருச்சி பகுதிகளில் ஊரடங்கு முழுமையாக அமல் செய்யப்படுகிறதா என்பதை அறிய அந்த சரக காவல் துறை துணைத் தலைவர் ஆனி விஜயா இன்று ஆய்வு செய்தார். சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவுக்கு அவர் சைக்கிளில் ரோந்து பணி மேற்கொண்டார்.

வாகனத்தில் விர்ரென்று பறக்காமல் சைக்கிளில் டிஜஜி ஆனி விஜயா ரோந்து சென்றது திருச்சி வட்டார மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

காவலர்களுக்கு அறிவுரை

வழிநெடுக காவல் சோதனைச் சாவடிகளில் செய்யப்பட்டுள்ள கண்காணிப்பு ஏற்பாடுகள் குறித்து விசாரித்து அறிந்தார்.
திருச்சி விமான நிலையம், செம்பட்டு வழியாகப் புதுக்கோட்டை மாவட்ட எல்லையான மாத்தூர் வரை உள்ள சோதனைச் சாவடிகளுக்குச் சென்று ஆய்வு செய்ததுடன், காவல் துறையினருக்கு முக்கிய அறிவுரைகளையும் வழங்கினார். திருச்சி விமான நிலையத்தில் உள்ள காவல் நிலையம், மாத்தூர் காவல் நிலையம் ஆகியவற்றிலும் ஆய்வு மேற்கொண்டார்.


வாகனத்தில் விர்ரென்று பறக்காமல் சைக்கிளில் டிஜஜி ஆனி விஜயா ரோந்து சென்றது திருச்சி வட்டார மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *