வழக்கில் சிக்கினார் நடிகை கங்கணா

உத்தர பிரதேசத்தை பூர்விகமாக கொண்ட நடிகை கங்கணா ரணாவத், பாலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ளார். தற்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேடத்தில் தலைவிஎன்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தி மட்டுமன்றி தென்னிந்தியா முழுவதும் பிரபலமான கங்கணா ரணாவத், பாஜகவுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர். மேற்குவங்கத்தில் தற்போது நிலவும் அரசியல் வன்முறை தொடர்பாக ஆளும் திரிணமூல் காங்கிரஸ், முதல்வர் மம்தாவை நடிகை கங்கணா கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதன்காரணமாக அவரது ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக மூடப்பட்டது. தற்போது திரிணமூல் காங்கிரஸ் சார்பில் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக வழக்கு, விசாரணையில் அவர் சிக்கியுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கூட்டணி அரசுக்கு எதிராக கங்கணா கொதித்து எழுந்ததால்  அந்த மாநிலத்தில் அவருக்கு எதிராக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. விதிமீறலை சுட்டிக் காட்டி மும்பையில் உள்ள அவரது அலுவலகம் இடிக்கப்பட்டது. தற்போது திரிணமூல் கங்கணாவை சிக்கலில் சிக்க வைத்துள்ளது.

மத்திய அரசு சார்பில் கங்கணாவுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மாநில அரசுகள் கங்காணாவுக்கு எதிராக எழுந்தாலும் மத்திய அரசு அவருக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும் அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *