எச்1பி விசாவில் தளர்வு..மனைவி, பிள்ளைகளை அமெரிக்கா அழைத்துச் செல்லலாம்…

வெளிநாடுகளை சேர்ந்த திறன்வாய்ந்த தொழிலாளர்களுக்காக அமெரிக்க அரசு சார்பில் எச்1பி விசா வழங்கப்படுகிறது. இந்த விசாவின் காலம் 3 ஆண்டுகள் ஆகும். இதனை 6 ஆண்டுகள் வரையும் நீட்டிக்க முடியும். ஓராண்டுக்கு 85,000 எச்1பி விசாக்களை அமெரிக்கா வழங்குகிறது. இதில் 70 சதவீதத்தை இந்தியர்கள் பெறுகின்றனர்.

எச்1பி விசா விண்ணப்பம்
எச்1பி விசா விண்ணப்பம்


தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் அமெரிக்காவை சேர்ந்த தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் உட்பட ஏராளமான நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. இதன்காரணமாக எச்1பி விசாவில் அமெரிக்காவில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலையிழப்பை சந்தித்துள்ளனர்.

எச்1பி விசா வைத்திருப்போர் வேலையிழந்தால் 60 நாட்களுக்குள் அமெரிக்காவில் இருந்து வெளியேற வேண்டும்.
இதனிடையே புதிதாக எச்1பி விசா வழங்க இந்தாண்டு இறுதிவரை தடை விதிக்கப்பட்டது. இதற்கான உத்தரவை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த ஜூன் 22-ம் தேதி வெளியிட்டார்.

எச்1 பி விசா
எச்1 பி விசா

இதற்கு கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தன.இந்நிலையில் எச்1 பி விசாவில் அமெரிக்க அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது. இதன்படி அமெரிக்காவில் ஏற்கெனவே வேலை பார்த்தவர்கள் எச்1பி விசா மூலம் மீண்டும் அமெரிக்காவுக்கு திரும்பி பணியாற்றலாம்.

எனினும் ஏற்கனவே தாங்கள் வகித்த வேலையில் சேர்ந்து மீண்டும் பணியாற்றுவதாக இருந்தால் மட்டுமே அமெரிக்கா திரும்பலாம். மேலும் எச்1பி விசா வைத்துள்ளவர்கள் தங்களது மனைவி, பிள்ளைகளையும் அமெரிக்கா அழைத்து வரலாம் என்று அந்த நாட்டு வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது. இதன்மூலம் இந்தியர்கள் பெரிதும் பயன் அடைவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *