டிக் டாக் நட்பால் விபரீதம்.. டிவி நடிகை தூக்கிட்டுத் தற்கொலை

டிக் டாக் நட்பால் விபரீதம்.. டிவி நடிகை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தெலுங்கு சின்னத்திரையை சேர்ந்த பிரபல நடிகை ஷ்ரவாணி (வயது 26). இவர் ஈடிவியின் மனது மமதா சீரியல் மற்றும் ஸ்டார் மா டிவியின் மவுன ராகம் சீரியலில் நடித்து புகழ் பெற்றவர்.
நடிகை ஷ்ரவாணி சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்தார்.

டிக் டாக் தடை செய்யப்படுவதற்கு முன்பாக தெலுங்கு டிக்டாக் பிரபலமாக அவர் வலம் வந்தார். தெலுங்கு திரைப்பட பாடல்களுக்கு டிக்காக்கில் அவர் ஆடி பாடிய வீடியோக்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து வந்தன.

இந்த சூழ்நிலையில், டிக் டாக் மூலம் ஆந்திராவின் காக்கி நாடாவை சேர்ந்த தேவராஜ் என்பவருடன் ஷ்ரவாணிக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருக்கமாக பழகி வந்தனர்.

ஒரு கால கட்டத்தில் தேவராஜ் வில்லனாக மாறினார். அவரும் ஷ்ரவாணியும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை காட்டி பணம் பறித்தார்.

அதிக பணம் கேட்டு ஷ்ரவாணியை அவர் அடிக்கடி தொல்லை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த பின்னணியில் ஹைதராத்தின் மதுராநகரில் உள்ள தனது வீட்டின் குளியல் அறையில் கடந்த 8-ம் தேதி இரவு ஷ்ரவாணி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து போலீஸார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஷ்ரவாணியின் சகோதரர் சிவா கூறும்போது, “சில வீடியோக்களை வெளியிட்டுவிடுவேன் என்று எனது சகோதரியை தேவராஜ் மிரட்டி வந்துள்ளார்.

அவரது டார்ச்சர் தாங்க முடியாமல் ஷ்ரவாணி தற்கொலை முடிவு எடுத்திருக்கிறார்” என்று குற்றம் சாட்டினார்.

இதுதொடர்பாக ஹைதராபாத் எஸ்.ஆர். நகர் போலீஸ் நிலையத்தில் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *