டிவி நடிகை தற்கொலை

மும்பையை சேர்ந்த டி.வி. நடிகை அனுபாமா பதக் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.


போஜ்புரி மொழி திரைப்படங்கள் மற்றும் டி.வி. சீரியல்கள் மூலம் வடஇந்தியா முழுவதும் பிரபலமானவர் அனுபாமா பதக் (வயது 40). இவர் மும்பையின் எம்.எம்.ஆர்.டி.ஏ. பகுதியில் வசித்து வந்தார்.

மரணத்துக்கு முன்பு நடிகையின் கடைசி பேஸ்புக் வீடியோ

இவர் சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
அதற்கு ஒரு நாளைக்கு முன்பாக பேஸ்புக்கில் லைவ்வாக பேசியுள்ளார். அப்போது பலரால் ஏமாற்றப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். அவரது மரணம் குறித்து மும்பை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


கொரோனா வைரஸால் திரைத்துறை, சின்னத்திரை முடங்கியுள்ளது. இதன்காரணமாக நடிகர், நடிகைகள் வருமானமின்றி தவித்து வருகின்றனர். சிறிய நடிகர்கள் பெரிய அளவில் பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றனர். இதன்காரணமாக திரைத்துறையில் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *