ஒரே பாலின திருமணத்தை அனுமதிக்க முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிக்கக் கோரி டெல்லி ஐகோர்ட்டில் கவிதா அரோரா என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியது.
இதன்படி மத்திய அரசு சார்பில் வியாழக்கிழமை விரிவான பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஒரே பாலின திருமணத்தை அனுமதிக்க முடியாது. இது இந்திய கலாச்சாரத்தின்படி ஏற்றுக் கொள்ளத்தக்கது கிடையாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.