அக். 15 முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி

அக். 15 முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25-ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. இதன்பின் 4 கட்டங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

முதல் 2 கட்ட ஊரடங்குகள் கண்டிப்புடன் அமல் செய்யப்பட்டன. 3, 4-ம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டன.

கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் ஊரடங்கில் இருந்து வெளியேறுவதற்கான வழிகாட்டு நெறிகளை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி அக்போடர் மாதத்துக்கான 5-ம் கட்ட வழிகாட்டு நெறிகளை மத்திய அரசு கடந்த 30-ம் தேதி வெளியிட்டது.

அதன்படி அக்.15 முதல் திரையரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எனினும் 50 சதவீதம் பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று கண்டிப்புடன் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளை திறப்பது தொடர்பாக அக். 15 -க்குப் பிறகு முடிவு எடுக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

எனினும் வரும் 31-ம்தேதி வரை திரையரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்களை திறக்க தடை நீடிக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே தமிழகத்தில் இந்த மாதம் திரையரங்குகள் திறக்கப்படாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *