பண்டிகை காலத்தில் பின்பற்ற வேண்டிய விதிகள் என்ன? என்பது குறித்து மத்திய சுகாதாரத் துறை வழிகாட்டு நெறிகளை வெளியிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மண்டலங்களில் பண்டிகை நிகழ்வுகளுக்கு அனுமதி கிடையாது. இங்கு வசிப்பவர்கள் வீடுகளுக்குள்ளேயே பண்டிகையை கொண்டாடலாம்.
அரசு அதிகாரிகள் கூட்டங்களை ஒழுங்குபடுத்த வேண்டும். சமூக இடைவெளி கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். குழுவாக இணைந்து மக்கள் பாடுவதை தடுக்க வேண்டும்.
விழா நடைபெறும் இடங்கள் விஸ்தாரமாக இருக்க வேண்டும். விழா நடைபெறும் இடங்களை அடிக்கடி கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்த வேண்டும்.
விழாவில் பங்கேற்கும் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.
ஊர்வலர்களில் ஏராளமானோர் பங்கேற்கக்கூடாது. நுழைவு வாயில், வெளியேறும் வாயில் தனித்தனியாக இருக்க வேண்டும்.
ஆம்புலன்ஸ், மருத்துவக் குழுவை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்” என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.