மத்திய அமைச்சருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
மத்திய ஜவுளி துறை அமைச்சராக ஸ்மிருதி இரானி (வயது 44) பணியாற்றி வருகிறார். பீகார் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அந்த மாநிலத்தில் பாஜகவுக்காக அமைச்சர் இரானி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அவருக்கு காய்ச்சல் அறிகுறிகள் ஏற்பட்டன. இதைத் தொடர்ந்து அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதில் அவருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. என்னோடு தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.