12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அலகுத்தேர்வு

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அலகுத்தேர்வு என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வாட்ஸ் அப்பில் மாணவிகளுக்குத் தனியாகவும், மாணவர்களுக்குத் தனியாகவும் குழு ஏற்படுத்த வேண்டும். மாணவ மாணவிகளுக்குத் தனித்தனியாக உள்ள வாட்ஸ் அப்  குழுவில் வினாத்தாள்களை அனுப்ப வேண்டும்.

மாணவர்கள் வினாத்தாளைப் பார்த்து அதற்குரிய விடைகளைத் தனித் தாளில் எழுத வேண்டும். விடைத்தாளில் பெற்றோர் கையொப்பம் பெற்றுப் பின் அதைப் படம் பிடித்து, PDF ஆக மாற்றிப் பதிவேற்ற வேண்டும்.

விடைத்தாளில் பெயர், தேர்வுத்துறையால் வழங்கப்பட்டுள்ள பதிவு எண் ஆகியவை கட்டாயம் இடம் பெற வேண்டும். வாட்ஸ் அப்  குழுவில் வினாத்தாள், விடைத்தாள் தவிர வேறு செய்திகள், வீடியோக்களைப் பதிவிடக் கூடாது. ஆசிரியர்கள் விடைத்தாள்களை வாட்ஸ்அப் மூலம் திருத்தி அதற்கான மதிப்பெண்களை வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *